பாவம் அது
அதன் கால்களை
எண்ணுகின்றான்
உயிர் ஊசலை இரசிக்கிறான்
தலையை
எத்தனைமுறை
சுற்றுகிறதென
அவதானிக்கிறான்
தன்மேல்
படரவிட்டு
படரவிட்டு
படரவிட்டு
கடிவலியை
உணர்கிறான்
தப்பிக்க விட்டுத்
தப்பிக்க விட்டுத்
தப்பிக்க விட்டுச்
சிறைப்பிடிக்கிறான்
சில நேரங்களில்
தாயாய்
விளையாட்டுப்பொருளாய்
உணவுப் பொருளாக
எதிரியாய்
எறும்பாகவும்
குழந்தையின்
கையில் கிடக்கிறது
எறும்பு
மாண்புமிகு
நீதிபதியே
என் மரணத்தை
உடனே அறிவியுங்கள்
மன்றாடுகிறது
பாவம் அது
சொர்க்கம் நிச்சயம்
- நம்தேவ்
அதன் கால்களை
எண்ணுகின்றான்
உயிர் ஊசலை இரசிக்கிறான்
தலையை
எத்தனைமுறை
சுற்றுகிறதென
அவதானிக்கிறான்
தன்மேல்
படரவிட்டு
படரவிட்டு
படரவிட்டு
கடிவலியை
உணர்கிறான்
தப்பிக்க விட்டுத்
தப்பிக்க விட்டுத்
தப்பிக்க விட்டுச்
சிறைப்பிடிக்கிறான்
சில நேரங்களில்
தாயாய்
விளையாட்டுப்பொருளாய்
உணவுப் பொருளாக
எதிரியாய்
எறும்பாகவும்
குழந்தையின்
கையில் கிடக்கிறது
எறும்பு
மாண்புமிகு
நீதிபதியே
என் மரணத்தை
உடனே அறிவியுங்கள்
மன்றாடுகிறது
பாவம் அது
சொர்க்கம் நிச்சயம்
- நம்தேவ்
6 கருத்துகள்:
Arumai
அருமை நண்பரே
நன்று
நன்றி
சிறுவயது ஞாபகம்...
நன்றி
கருத்துரையிடுக