நிறப்பகிர்வு
இன்றும் நடந்துவிட்டது
அந்தத் தழுவல்
என்ன ஒரு தழுவல்
காற்று கூட உட்புகமுடியாதபடி
ஒரு ஆழ்ந்த தழுவலில்
உணர்சிகளைப் பகிரலாம்
இதென்ன கொடுமை
நிறங்களின் பகிர்வு
எத்தனையெத்தனையோ
முறை
இந்தத் தவற்றைச்
செய்திருக்கிறேன்.
எத்தனை முறை
இணைந்து விடக்கூடாதென்று
தடுத்திருக்கிறேன்.
மதி மயங்கி நிற்கிறேன்.
தூக்கியெறிந்து விட்டேன்
இனி தேவையில்லை
பேண்ட்டோடு
ஊறவைத்த
புதுச்சட்டை
சாயம் கக்கிவிட்டதை
வைத்து வேறென்ன செய்யமுடியும்..
அந்தத் தழுவல்
என்ன ஒரு தழுவல்
காற்று கூட உட்புகமுடியாதபடி
ஒரு ஆழ்ந்த தழுவலில்
உணர்சிகளைப் பகிரலாம்
இதென்ன கொடுமை
நிறங்களின் பகிர்வு
எத்தனையெத்தனையோ
முறை
இந்தத் தவற்றைச்
செய்திருக்கிறேன்.
எத்தனை முறை
இணைந்து விடக்கூடாதென்று
தடுத்திருக்கிறேன்.
மதி மயங்கி நிற்கிறேன்.
தூக்கியெறிந்து விட்டேன்
இனி தேவையில்லை
பேண்ட்டோடு
ஊறவைத்த
புதுச்சட்டை
சாயம் கக்கிவிட்டதை
வைத்து வேறென்ன செய்யமுடியும்..
-நம்தேவ்