திங்கள், 11 மே, 2020

சிரித்து விட்டாய்

                      சிரித்து விட்டாய்


ஆம்
நீ 
சட்டென
சிரித்து விட்டாய்

சிலையாகி விட்டால்
எம்முனிவன்
கை படுமோ
யுகங்கள் காக்க வேண்டும்

அதை நான் 
ஓராயிரமுறையல்லவா
ஸ்லோமோசனில் 
மனத்திரையிட்டுப் பார்ப்பேன்

ஐயோ
நீ 
சட்டென
சிரித்து விட்டாய்

மேலுதடு 
கொஞ்சம் 
நோஞ்சான் தான்

கீழுதடு
கொஞ்சம்
குண்டன்தான்

அதென்ன
வெள்ளைத்தங்கங்கள்
கிரிக்கெட் மைதான
ஓவல் வடிவில்
நிற்க வைக்கப்பட்டிருக்கின்றன.

வயதான பிறகு
உனக்கும்
பற்கள்
விழுமா

உதடுகளில்
சுருக்கங்கள் கூட
விழுமா

தற்கொலை செய்துகொள்ளப்
போகிறவர்களுக்கு
ஆலோசனை தரும்
எண்ணில்
உன்‌சிரிப்பை காலர் டியூனாக
வைத்து விடலாம்

என்னைப்பார்
யோகம் வரும்
படம் போல

என் சிரிப்பைப்பார்
கவலை தீரும்
என்று
விளம்பரப்படுத்தலாம்

ஒரு பற்பசை
நிறுவனத்தில்
மாடலாக
உன்னை இன்னும்
நியமிக்காதது ஏன்

இதையெல்லாம்
விடு
உன் உதடுகளையும்
பற்களையும்
இன்சூரன்ஸாவது
செய்யேன்.

ஆம்
நீ
சிரித்தே விட்டாய்
நான்
சிதைந்தே
விட்டேன்
   
                                -நம்தேவ்

கருத்துகள் இல்லை:

                    எங்கள் வீட்டு வேப்பமரம் நீ சுயம்பு எங்கள் பெரியவர்களில் யாரோ பறவைகளில் எதோ சிறுவர்களாக இருந்த நாங்க...