புதன், 20 மே, 2020


                    எங்கள் வீட்டு வேப்பமரம்


நீ சுயம்பு
எங்கள் பெரியவர்களில்
யாரோ
பறவைகளில் எதோ

சிறுவர்களாக இருந்த
நாங்கள் வேப்பமுத்தை
வைத்து விளையாடிய
போது தோற்ற‌வேகத்தில்
தூக்கியெறிந்தோ

எப்படியோ
நீயாக முளைத்தாய்

உன்னை நீரிட்டு வளர்த்தோமில்லை
உரமிட்டு உரமேற்றினோமில்லை
வலையிட்டு பாதுகாத்தோமில்லை
கூண்டடைத்து உயரவிட்டோமில்லை
எப்படியோ வளர்ந்து நிற்கிறாய்

ஒரு நாடற்றவன் போல
வீடற்றவன் போல
பெற்றோர் அற்றவன்‌ போல

பல புயல்கள்
சில பழிவாங்கல்கள்
சுழன்றடிக்கும்
சூறைக்காற்றுகள்
பெருமழைக்காலம்
சிற்சில சிரச்சேதங்களோடு
தப்பி வந்தாய்...

நாளையே வனங்களை
அழிக்கும் கடும்புயல்
வன்மம்
விடாப்பழிவாங்கல்
பெரிய வீடோ
நானோ
என்னைச்சார்ந்தோரோ
எவரேனும் வரலாம்
உன்னை அழிக்க....
                           - நம்தேவ்

கருத்துகள் இல்லை:

                    எங்கள் வீட்டு வேப்பமரம் நீ சுயம்பு எங்கள் பெரியவர்களில் யாரோ பறவைகளில் எதோ சிறுவர்களாக இருந்த நாங்க...