புதன், 6 மே, 2020

தூய்மைப் பணி

           தூய்மைப் பணியாளர்

"குப்பக்காரன் வந்துட்டான்"

சிறுமியின் மழலைச்சொல்
இனிமை

பணம்‌வைத்திருப்பவன்
பணக்காரன்‌ஆனபோது
குப்பை வாங்க வந்தவன்
 எப்படி குப்பைக்காரன்

இந்த உலகையே 
புறத்தூய்மை 
செய்தவர்கள்

தண்டவாளமாய்
எத்தனையோ
நோயென்னும்
இரயிலை
தன் மேல் வாங்கியவர்கள்..

குடித்து 
குடித்தே 
குடல் எரிந்து
குழைந்து போனான்..

உண்மையில் 

துப்புரவு செய்து
துப்புரவு செய்தே
துவண்டு போனான்..

எச்சில் சோறு

உடைத்துப்
போட்ட பாட்டில்

குடலை வெளியே
காயப்போடும்
நாற்றம்

துப்பிய சாலைகள்

அப்பிய தூசிகள்

சாக அழைக்கும்
சாக்கடைகள்

நேற்று கிணற்றிலே
விழுந்தழுகிய பிணம்

இன்று கொலையுண்டு
கிடந்தழுகிய சடம்

நாளை இறக்கப்போகிற
மனித உடல்


தொட்டால்
தொடரும்
படரும்
கொல்லும்
மணிமுடிநுண்ணி

அனைத்தையும்
கரங்களால்
அள்ளியவர்

தூய்மைமைப் பணி
சேவைப்பணி
                                   
                                            -நம்தேவ்




7 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமை

இசக்கி முத்து சொன்னது…

அருமை, உண்மை ஐயா

சுரேஷ் குயோரா 12th தமிழ் சொன்னது…

அருமை ஐயா...

T Subramanian சொன்னது…

அருமை... உண்மையில் தூய்மைப் பணி சேவைப் பணிதான்...

www.Namdev.com சொன்னது…

நன்றி

www.Namdev.com சொன்னது…

நன்றி

www.Namdev.com சொன்னது…

நன்றி

                    எங்கள் வீட்டு வேப்பமரம் நீ சுயம்பு எங்கள் பெரியவர்களில் யாரோ பறவைகளில் எதோ சிறுவர்களாக இருந்த நாங்க...