கோப்பை
இப்பெரு
மழைக்காலத்திற்காகத்தான்
காத்திருந்தேன்.
வானம் பூமியைக்
குத்திக் கொண்டிருக்கிறது.
மண்ணழுது
மழைக்காலத்திற்காகத்தான்
காத்திருந்தேன்.
வானம் பூமியைக்
குத்திக் கொண்டிருக்கிறது.
மண்ணழுது
மழைச்சாறு
முகவரியறியாமல்
பரந்தோடுகிறது.
வீட்டுச் செடிகள்
பரந்தோடுகிறது.
வீட்டுச் செடிகள்
மழையின்
கன்னத்தடியை
வாங்கி வாங்கி
வாங்கி வாங்கி
நிமிர்கிறது.
ஒரு காக்கை
முழுசா நனைந்திட்டேன்
முக்காடெதற்கென்கிறது.
கொஞ்சம் வானத்தை
உத்துப் பார்த்தேன்
ஐயோ
பொத்துகிட்டு
ஊத்துகிறது.
ஊத்துகிறது.
ஒரே இருள்மயம்
ஒரே குளிர்மயம்
ஒரே சப்தமயம்
ஒரு மெழுகை
ஏற்றிக்கொண்டு
நான்
நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
முந்தா நாள்
குடித்து மீதம்
வைத்திருந்த
முந்தா நாள்
குடித்து மீதம்
வைத்திருந்த
மதுநீரை..
பாவம்
பாவம்
அவன் என்ன செய்வான்
பாட்டிலுள் ஒளிகிறான்.
இவ்விருளில்
பாட்டிலுள் ஒளிகிறான்.
இவ்விருளில்
கோப்பையை
நான் எங்கே தேடுவேன்?
நான் எங்கே தேடுவேன்?
- நம்தேவ்
1 கருத்து:
நன்றி
கருத்துரையிடுக