நீ நான்
நீ தீ
நான் தீ
தீ தீயினை விலக்காது
நான் காற்று
நீ காற்று
காற்றுடன் காற்று சதிராடும்
நீ மழை
நான் மழை
மழையுடன் மழை
பின்னிப் பிடலாடும்
நான் கடுங்குளிர்
நீ கொடுங்குளிர்
குளிரும் குளிரும் குளியலாடும்
நீ நிழல்
நான் குளிர் தூங்கும் நிழல்
நிழலும் நிழலும் நிழலாடும்
எல்லாம் இப்படியிருக்கையில்
நீ நேர்
நான் முரண் என்கிறாய்.
-நம்தேவ்
தீ தீயினை விலக்காது
நான் காற்று
நீ காற்று
காற்றுடன் காற்று சதிராடும்
நீ மழை
நான் மழை
மழையுடன் மழை
பின்னிப் பிடலாடும்
நான் கடுங்குளிர்
நீ கொடுங்குளிர்
குளிரும் குளிரும் குளியலாடும்
நீ நிழல்
நான் குளிர் தூங்கும் நிழல்
நிழலும் நிழலும் நிழலாடும்
எல்லாம் இப்படியிருக்கையில்
நீ நேர்
நான் முரண் என்கிறாய்.
-நம்தேவ்
(27.04.20)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக