திங்கள், 4 மே, 2020

கவிதை

           வேறு எப்படிச் சொல்வேன்


 ஒவ்வொரு
 வாட்சாப் 
 உரையாடலிலும் 
 தட்டச்சு செய்துவிடலாமா?

சடக்கென்று
முகநூலில் 
ஒரு பதிவிட்டுவிடலாமா?

 ஸ்டேட்டஸில் ஓரிரு காப்பியடித்த
 கவிதைகளை வைத்து
 உணர்த்திவிடலாமா?

 சிற்பக்குகையில்
 இரு பெயர்‌பொறித்த
 கல்வெட்டை
 அழைத்துச் சென்று
 காட்டிடலாமா?

 தூதொன்றை
 விட்டு விடலாமா?

 பல யாமம்
 தனித்திருந்தே

 பல யாகம்
 செய்திட்டே

தைரியத்தை
வாடகைக்கு வாங்கி
ஒரு ஆயுதமில்லா
போர்வீரன்
நின்று போராடுவதைப்
போல
நேருக்கு நேர் நின்று
நிதர்சனத்தை
சொல்லி விடவா?

வேறு எப்படிச்சொல்வேன்
காதலை உன்னிடம்?

                                            - நம்தேவ்





















7 கருத்துகள்:

Unknown சொன்னது…

நன்று

இசக்கி முத்து சொன்னது…

மிகவும் அழகிய கவிதை ஐயா...

Unknown சொன்னது…

இனிமை

www.Namdev.com சொன்னது…

நன்றி

www.Namdev.com சொன்னது…

நன்றி

www.Namdev.com சொன்னது…

நன்றி

www.Namdev.com சொன்னது…

நன்றி

                    எங்கள் வீட்டு வேப்பமரம் நீ சுயம்பு எங்கள் பெரியவர்களில் யாரோ பறவைகளில் எதோ சிறுவர்களாக இருந்த நாங்க...