ப்ரேக் அப்
உன் பிரிவென்பது
என்னை
இன்னும்
துளைக்காத தோட்டா
என்னை
இன்னும்
துளைக்காத தோட்டா
அதிசிறந்த
சிறகுப்பந்தாட்ட
வீரர்களால்
சிறகொடிந்த
பந்தைப் போன்றது
என் காதல்
சிறகுப்பந்தாட்ட
வீரர்களால்
சிறகொடிந்த
பந்தைப் போன்றது
என் காதல்
பேரிடர் காலங்களில்
இன்னும்
உணவு கிடைக்கப் பெறாத
ஒரு பணக்காரனின் பசி
என் காதல்
இன்னும்
உணவு கிடைக்கப் பெறாத
ஒரு பணக்காரனின் பசி
என் காதல்
ஒரு பல்லி வாயிலில்
சிக்கித் தவிக்கின்ற
பெரிய பூச்சியும் கூட
சிக்கித் தவிக்கின்ற
பெரிய பூச்சியும் கூட
உவமைகளை
இப்படி
அள்ளித்தெளித்தால்
நின்று விடவா போகிறது
நம் பிரிவு
இப்படி
அள்ளித்தெளித்தால்
நின்று விடவா போகிறது
நம் பிரிவு
தோட்டா
துளைத்தால் தானே
அது
அது
தோட்டா...
- நம்தேவ்
3 கருத்துகள்:
பிரேக் அப் அல்ல மெமரி அப்...
முதிர்ந்த அனுபவம். சொல்லின் முதிர்ச்சி வார்த்தை ஜாலத்தில் தெரிகிறது. சிறப்பு.
நன்றி
கருத்துரையிடுக